"பொது சிவில் சட்டம் தொடர்பான அதிமுக நிலைப்பாட்டில் மாற்றமில்லை.." - ஜெயக்குமார்...!
பொது சிவில் சட்டம் தொடர்பான அதிமுகவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நாளுக்கொரு ஸ்டண்ட் அடிப்பது திமுகவின் வாடிக்கை என்றும், அதிமுக அதுபோல் இருப்பதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ரெட்டைமலை சீனிவாசன் பிறந்த தினத்தையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள அவரது உருவ சிலைக்கு, அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Comments